இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துறவறம் துறந்த துறவியின் கதை !

படம்
.                          அது ஒரு மார்கழி மாதம், பனிப்பூவும் இரகசியமாய் பூமிக்கிறங்கும் நேரம் . பகலின் களைப்பு நீங்க இரவின் மடியில் மானுடர் தாம் துயில் கொள்ளும் வேளையில் தூங்காது விழித்திருந்தது ஒரு இதயம். அவன் நினைவுகள் செட்டைகளை  விரித்து பறக்க தொடங்கியிருந்தது, இரை  தேடும் பறவை போல் அவனது கேள்விகளுக்கான பதில்களை தேடி அது பறந்து கொண்டிருந்தது, காலச்சக்கரத்தின் பின்னோக்கி. எங்கேயேனும் ஏதேனும் நிகழ்வுகளில் அதற்க்கான தடயங்கள் தென்படுகிறதா எனத் தேடத்தொடங்கியது. நடந்து முடிந்தவைகளில் எந்த தடயமும் மேலோட்டமாக தென்படுவதாக இல்லை. ஒவ்வொரு நிகழ்வுகளையும்  துருவ ஆரம்பித்தது, சில நிகழ்வுகள் காட்சிகளாக  நினைவலையில் ஓடத்தொடங்கியது. காட்சி: 1                  ஏழு வருடம் தவமிருந்து பெற்றெடுத்த தவப்புதல்வனை ராஜகுமாரன் போலவே வளர்க்க ஆரம்பித்தனர். அவனது தந்தையோ அவனுக்கு தங்கபஷ்பம் அரைத்து கொடுத்தார். அவனது தாயானவள் தன் அன்னையிடம் தவப்புதல்வனை வளர்க்கும் படி ஒப்படைத்து செல்கிறாள். பாட்டிக்கோ இவன் மீது கொள்ளை பிரியம், இவனுக்கும் தான். அங்கு அவனுக்கு சகல சவுகரியங்களும் கிடைக்கின்றது.