என்றென்றும் உயிர்க்காதலுடன்
உறவாக நீ இருந்திருந்தால் உன்னை என்றோ மறந்திருப்பேன் - என் உயிரோடல்லவா கலந்து விட்டாய் உன்னை எப்படி மறப்பது உன்மீது கொண்ட நேசம் அக்கினி ஜுவாலையன்றோ தண்ணீரும், வெண்பனியும் கொண்டு தணிக்க முடியாதது. வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்த பின்னரே காதல் கத்தரிக்காய் என்று தேடிவந்த காதலை .................. இதெல்லாம் நாமளா தேடிபோறதில்லைங்க அனிச்சை செயல் மாதிரி தானாக வர்றது. பிறப்பு, இறப்பு மாதிரி காதலையும் நம்மால் வரையறை செய்ய முடியாது. காதல் என்றதும் பெருசுங்க எல்லாம் ஏன் முகத்தை சுழிக்கிறீங்க. ஏன்! இன்றைக்கு உங்ககிட்ட அது இல்லையா அல்லது அது இளையோருக்கு மட்டுமே உரித்தானதா. இன்னைக்கும் உங்க மனைவிய அல்லது கணவனை நீங்க காதலிக்கவில்லையா சரி விடுங்க அப்படி இல்லன்னா அந்த முதல் காதலை மறக்க நினைத்து முயற்சித்து தோற்கவில்லையா. முதலோ அது முடிவோ எதிலும் காதல் இல்லைனா இந்த உலகமே இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மனிதனை மனிதனாய் காட்டுவதே இந...