என்றென்றும் உயிர்க்காதலுடன்

உறவாக  நீ   இருந்திருந்தால்
உன்னை என்றோ மறந்திருப்பேன் - என்
உயிரோடல்லவா கலந்து விட்டாய்
உன்னை எப்படி மறப்பது
உன்மீது கொண்ட நேசம் அக்கினி ஜுவாலையன்றோ 
தண்ணீரும், வெண்பனியும் கொண்டு  தணிக்க முடியாதது.

           வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்த பின்னரே காதல் கத்தரிக்காய் என்று தேடிவந்த காதலை  ..................
         இதெல்லாம் நாமளா தேடிபோறதில்லைங்க அனிச்சை செயல் மாதிரி தானாக வர்றது. பிறப்பு, இறப்பு மாதிரி  காதலையும் நம்மால் வரையறை செய்ய முடியாது.  காதல் என்றதும்  பெருசுங்க எல்லாம் ஏன் முகத்தை சுழிக்கிறீங்க. ஏன்! இன்றைக்கு உங்ககிட்ட அது இல்லையா அல்லது அது இளையோருக்கு மட்டுமே உரித்தானதா. இன்னைக்கும் உங்க மனைவிய அல்லது கணவனை  நீங்க காதலிக்கவில்லையா   சரி விடுங்க  அப்படி  இல்லன்னா அந்த முதல் காதலை மறக்க நினைத்து முயற்சித்து தோற்கவில்லையா. முதலோ அது முடிவோ எதிலும் காதல் இல்லைனா இந்த உலகமே இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மனிதனை மனிதனாய் காட்டுவதே இந்த காதல் தான். காதல் இதுதான் உலகத்தின் தொடக்கமும் முடிவுமானது.
         இந்த காதல் வந்த பின் தான் நாம வாழ்கின்ற வாழ்விற்கு ஓர் அர்த்தமே கிடைகின்றது. சங்கும் ஊதப்படாமலிருந்திருந்தால் சங்கிற்க்கான  பிரதானம் அறியப்படாமலிந்திருக்கும் வெறும் சுண்ணாம்பாய் அறியப்பட்டிருக்கும். அது போலவே காதல் இல்லாத மனிதனும் வெறும் ஜடமே. இந்த மனசும் (ஆசை, காதல்), வயிறும் இல்லாதிருந்தால் நாம வெறும் திடப்பொருளா தான் இருந்திருப்போம். அங்கு மூளைக்கு கூட வேலை இருந்திருக்காது. வெறும் கல்லாய் எந்த வளர்ச்சியும் இருந்திருக்காது மாற்றங்களும் நடந்திருக்காது.
        ஐந்து விரல்களும் வேறுவிதமாக இருப்பது போல் சிலருக்கு திருமணதிற்கு முன் வரும், சிலருக்கு திருமணதிற்கு பின் வரும் சிலருக்கு அறுபதிலும்  வரும்  பாருங்க எந்த எதிர் பார்ப்பும் இல்லாம ஒருவரை ஒருவர் தாங்கி, அது அனைத்தும் அறிந்த பின் வரும் தெளிந்த காதல். இந்த கடைசி காதலும் முதற் காதலும் ஒன்றே. உண்மை காதல் குலம், கோத்திரம் பார்த்து வருவதில்லை பார்த்தவுடனே (மனசை) அவங்களுக்காக நம்ம உயிரையே கொடுக்கலாம்னு  நம்ம மனசு சொல்லணும். பல்பு எரியணும் மணி அடிக்கணும் நம்மை அப்படியே தலை கீழாக புரட்டி போடணும்.வேறு எதாவது எதிர் பார்ப்புடன் வந்தால் அது பண்டமாற்று முறை (வியாபாரம்), அது மூளைக்காதல்              
        இந்த பரிசுத்தமான காதல் இருக்கிற போது தான் பிறருக்காக சிலவற்றை (அந்த வறட்டு கௌரவத்தையும்)  விட்டு கொடுக்க தோணும் ஒரு அன்பு பிறக்கும் அந்த அன்பு இருக்கிற இடத்தில தான் அந்த ஆண்டவனும் குடியிருப்பான்.

       வாழ்க்கை, பூமி இவை இரண்டும் ஒரு வட்டம்
மனித வாழ்க்கை :
1.குழந்தைபருவம்.
2.விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும்.
3. இளமைப் பருவம்,பிற பருவத்துனருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை   இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவு மிக்கது, செயற்பாட்டை முதன்மைப் படுத்துவது.
4. மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது.பெற்ற   அனுபவங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றான். போகும் போது வெறுமையாய் திரும்பி செல்கின்றான்.  மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் சாரம். இந்தக் கோட்பாட்டைப் பற்றி Theodore. C. Goldsmith Theories of Biological Aging  என்ற ஆய்வறிக்கையில் விளக்கம் காணலாம்.
இதில் குழந்தை பருவமும், முதுமையும் ஒன்றே .....மறுபடியும் குழந்தையாக இப்புவியினிலே 

பூமி:
சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கிரகங்களில் ஒன்று.இதனை உலகம் , நீலக் கிரகம்  மற்றும் டெரா என்றும் அழைப்பர்.
1.இளவேனிற்காலம் ,
2. கோடைகாலம் ,
3.இலையுதிர்காலம் ,
4. குளிர்காலம் .                     


இந்த இரண்டையும் பார்த்தீங்கன்னா ஒரு சுழற்சி முறையில் தொடர்ந்துகொண்டே  இருக்கும் .பல ஆயிரம் வருடங்கள் கழிகின்றன பேரழிவு மீண்டும் பூஜ்யம் . அமீபாக்களின் வளர்ச்சி புல் பூண்டுகள், செடி கொடிகள், விலங்குகள் பறவைகள்,மனிதன் அறிவு மற்றும் தொழில் நூட்ப்ப வளர்ச்சி   சந்திரமண்டலத்திற்கு செல்கின்றான் பூமியிலுள்ள பொருட்களை அங்கு கொண்டு வைக்கின்றான். அது விண்கல்லாய் மீண்டும் பூமிக்கே திரும்புகிறது. பூமியின் எடையும் சரியாகிறது.  மீண்டும் பூமி தன்னை சுத்தம் செய்கிறது.
          இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் ஆடுகிறோம் பாடுகிறோம்  (படித்தவன்,படிக்காதவன்) (உயர்ந்தவன், தாழ்ந்தவன்) (ஏழை, பணக்காரன்) கடைசியில் எல்லாம் (மண்ணாய்) பூஜியமாய்.
        ஏன் இந்த ஆட்டம் எதற்கிந்த ஓட்டம் . உன்னால் ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் முடியாதே அப்புறம் எதர்க்கிந்த தம்பட்டம், வீண்பேச்சு, ஆடம்பரம். நீ மரிக்கும் போது உனக்காக பரிதவிக்க இதயங்கள் மட்டும் போதுமே, அறியாமையை உன்னிலிருந்து அகற்றி  விடு. போட்டி வேண்டாம். பொறாமை வேண்டாம்.
மீண்டும் ஒரு முறை காதல் செய்!,
புதியதோர்  உலகம் நீயும் செய்!
         இப்போது பார் உலகம் அழகானது அதை நீயும் ரசி!            

                                          
                                                                           என்றென்றும்  உயிர்க்காதலுடன்
                                                                                                  

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
உணர்வு பூர்வமான நல்ல பதிவு. அழகான உலகத்தை, நீங்கள் ரசித்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்!
Ananthi (அன்புடன் ஆனந்தி) இவ்வாறு கூறியுள்ளார்…
kavithai arumai.. vazhthukkal :)
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழில் அழகாக எழுதி உள்ளீர்கள்... கையெழுத்து மட்டும் ஆங்கிலத்தில்.. அழகாகத்தான் உள்ளது..

நன்றி..
prince இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி! Chitra

நன்றி! Ananthi

நன்றி! பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
Priya இவ்வாறு கூறியுள்ளார்…
//மீண்டும் ஒரு முறை காதல் செய்!,
புதியதோர் உலகம் நீயும் செய்!
இப்போது பார்
உலகம் அழகானது அதை நீயும் ரசி!// ...... உண்மைதான், காத‌ல் இருந்தால் எல்லாம் அழகாக‌ தெரியும்.. ர‌சனையும் கூடும்.


மிகவும் உணர்ந்து அழகா எழுதி இருக்கிங்க!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா.. பாகம் இரண்டு

துறவறம் துறந்த துறவியின் கதை !