துறவறம் துறந்த துறவியின் கதை !

.
                         அது ஒரு மார்கழி மாதம்,
பனிப்பூவும் இரகசியமாய் பூமிக்கிறங்கும் நேரம் . பகலின் களைப்பு நீங்க இரவின் மடியில் மானுடர் தாம் துயில் கொள்ளும் வேளையில் தூங்காது விழித்திருந்தது ஒரு இதயம். அவன் நினைவுகள் செட்டைகளை  விரித்து பறக்க தொடங்கியிருந்தது, இரை  தேடும் பறவை போல் அவனது கேள்விகளுக்கான பதில்களை தேடி அது பறந்து கொண்டிருந்தது, காலச்சக்கரத்தின் பின்னோக்கி. எங்கேயேனும் ஏதேனும் நிகழ்வுகளில் அதற்க்கான தடயங்கள் தென்படுகிறதா எனத் தேடத்தொடங்கியது. நடந்து முடிந்தவைகளில் எந்த தடயமும் மேலோட்டமாக தென்படுவதாக இல்லை. ஒவ்வொரு நிகழ்வுகளையும்  துருவ ஆரம்பித்தது, சில நிகழ்வுகள் காட்சிகளாக  நினைவலையில் ஓடத்தொடங்கியது.

காட்சி: 1
                ஏழு வருடம் தவமிருந்து பெற்றெடுத்த தவப்புதல்வனை ராஜகுமாரன் போலவே வளர்க்க ஆரம்பித்தனர். அவனது தந்தையோ அவனுக்கு தங்கபஷ்பம் அரைத்து கொடுத்தார். அவனது தாயானவள் தன் அன்னையிடம் தவப்புதல்வனை வளர்க்கும் படி ஒப்படைத்து செல்கிறாள். பாட்டிக்கோ இவன் மீது கொள்ளை பிரியம், இவனுக்கும் தான். அங்கு அவனுக்கு சகல சவுகரியங்களும் கிடைக்கின்றது.
                                                                                                                                                                                                                                                                                                 (தொடரும்....)
.

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
தலைப்பே வித்தியாசமாக இருக்கே...... ரொம்ப எதிர்பார்க்க வைக்குது..... தொடர்ந்து அசத்துங்க!
வால்பையன் இவ்வாறு கூறியுள்ளார்…
தொடருங்க!
சைவகொத்துப்பரோட்டா இவ்வாறு கூறியுள்ளார்…
சட்டென முதல் பாகத்தை முடித்து விட்டீர்களே, இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.
Mahi_Granny இவ்வாறு கூறியுள்ளார்…
மார்கழி மாதத்து முன்னுரை வாசிக்கவே உங்க தமிழ் எனக்கு மூச்சு வாங்குது. . தொடருங்க. அடிக்கடி எழுதுனா நல்லது
ப்ரின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
@Chitra
இன்னும் நிறைய இருக்குது...
ப்ரின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
@சைவகொத்துப்பரோட்டா

நிறைய எழுதனும் எழுதனும்னு நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம், அதான் opening ceremony. இனி உங்களுடைய ஊக்குவிப்பினால் கண்டிப்பாக எழுதி தானே ஆகணும்!
ப்ரின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
@Mahi_Granny

முயற்சி செய்கிறேன்.. வருகைக்கு நன்றி!
தஞ்சை.வாசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் நண்பா...

வாரம் வாரம் ஆரவாரமாய் எங்களை வந்தடையட்டும்...

ஆவலுடன் படிக்க நாங்கள் காத்துக்கொண்டு...
விக்னேஷ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க தமிழ் ரொம்ப நல்லாருக்கு. தொடருங்கள் ப்ரின்ஸ்.
அஹமது இர்ஷாத் இவ்வாறு கூறியுள்ளார்…
தொடருங்க..
அண்ணாமலை..!! இவ்வாறு கூறியுள்ளார்…
தொடருங்கள் !
ப்ரின்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
@தஞ்சை.வாசன் நன்றி வாசன் :-)
Ananthi இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா ஆரம்பம்.. ஆனா இவ்ளோ சீக்கிரம் தொடரும் போட்டுட்டீங்களே..??
தொடருங்க பிரின்ஸ்.. :-))
சௌந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல இருக்கு தொடருங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா.. பாகம் இரண்டு

என்றென்றும் உயிர்க்காதலுடன்