என் வலியதை மறைத்திருந்தேன்.
ஏற்றம் பல நீ காண
எட்டி மிதிக்கும் உன் கால்களுக்கு
என் தோள் தந்தேன் ஏணியாக.
என் மீது நீ கல்லெறிந்தாலும்...
கனிகளை தான் நான் கொடுத்தேன்,
பல கனிகளை தான் கொடுப்பேன்.
அந்த கனிகளிலும்.....
உனக்கு மனமில்லை என்றால்
என்னிடம் கொடுத்துவிடு
என் வேருக்கு உரமாகும்,
பலபேருக்கு மருந்தாகும்.
ஆப்பிள் கனியதை நான் கொடுக்க
நன்மை தீமை அறிந்து கொண்டாய்
சிறு நெல்லிக் கனியதை நான் கொடுத்து
முற்பாதி கசந்தாலும் பிற்ப்பாதி இனிக்க வைத்தேன்
வாழை மரமாக நானிருந்தாலும்
உனை வாழவைக்க
உன்வாசலுக்கு வந்திருந்தேன்.
என்னை வெட்டி சுட்டாலும்
நறுமணம் தனை கமழச்செய்தேன்.
நீ இச்சென்மம் முடித்தாலும்
உன்னோடு நான் எரிந்தேன்.
உன் சவம் மூடும் சவப்பெட்டியானேன்.











