இடுகைகள்

ஜூன் 8, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

படம்
கவிதை என்பது எல்லா காலத்திற்க்கும் பொதுவான  ஒன்று அதுல என்ன புதுக்கவிதை, பழைய கவிதை என்று கேட்பது புரியுது சரி  புதுக்கவிதை பற்றி தெரிந்து கொள்வத ற் க்கு முன்னர்  யாப்பு இலக்கணம்பற்றி தெரிந்து கொள்வது நலம்.   யாப்பு இலக்கணம் : யாத்தல் என்னும் சொல்லுக்குக் கட்டுதல், பிணைத்தல், தளைத்தல் என்று பொருள். குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். இவ்வுறுப்புகள் தகுந்த முறையில் பிணைக்கப்படுவதால் இவ்விலக்கணத்தை யாப்புஎனும் பெயரால் குறித்தனர். செய்யுளுக்குரிய உறுப்புகள் ஓர் ஒழுங்கமைதியோடு கட்டப் பெறுகின்றன. யா என்னும் வினையடிச் சொல்லிலிருந்து இச்சொல் வந்தது. செய்யுள் குறிப்பிட்ட ஓர் ஓசையைப் பெறும் வகையில் செய்யுள் உறுப்புகள் சேர்த்து அமைக்கப் பெறுகின்றன. யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு இலக்கணம் பற்றி ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் . சரி புரியாவிட்டாலும் விட்டிருங்க . எல்லாவற்றையும்  சொல்