பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா

யூரி அலெக்சியேவிச் ககாரின் -
    விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். 
இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்  


     இவர் பயணித்து  49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா  செல்லவிருக்கிறோம் . நண்பர்களே  தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில விசயங்களை அறிந்து கொள்வோம் .
நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz  TMA-1



  ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்)
ஏவு தளத்தின் பெயர்Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா

பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன். அவர்களை விண்வெளி வீரர்கள் (மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்று அழைப்பார்கள் அவர்களும்  நம்முடன் பயணிப்பதால் பயப்பட தேவையில்லை.

இடது பக்கம் இருப்பவங்க ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை Tracy Caldwell Dyson ;
வலது பக்கம் இருப்பவங்க ரஷ்யாவை சேர்ந்த   விண்வெளி  வீரர்  Alexander Skvortsov
 
இவங்க நாசா விண்வெளி வீராங்கனை Dorothy Metcalf-Lindenburger 
 
இவங்க விண்வெளி வீராங்கனை Stephanie Wilson
இவருதாங்க நம்ம வண்டிய (விண்வெளி ஓடம்) ஓட்டபோற டைவரு ( pilot ) நாசா விண்வெளி வீரர் James P. Dutton

நாசா விண்வெளி வீரர் Clayton Anderson
இவங்க தானுங்க நம்ம விண்கல பொறியாளர்கள் ......(வண்டி வழில நின்னு போச்சுன்னா இறங்கி   தள்ளுவாங்க  போல ..ஹி ஹி ஹி ) ரொம்ப பொறுப்பானவங்க. பார்த்தாலே தெரியுதுல்ல வேலைல எவ்வளவு  மும்முரமாக  இருக்காங்க பாருங்க

சரி சரி ஆளு கூட்டம் அதிகமாகி போச்சி அதுனால நாம இன்னொரு வண்டியும் எடுத்துக்கலாம் அதாங்க அந்த விண்வெளி ஒடம்னு (space shuttle) சொல்லுவாங்க இல்ல .
இது தானுங்கோ  இன்னொரு வண்டி..சரி இதோட பெயர்: Discovery STS-131
space shuttle flight control room in the Johnson Space Center's Mission Control Center during launch countdown activities a few hundred miles away in Florida 

எல்லாம் சரி நம்மளோட இந்த இன்ப சுற்றுலாவ    நேரடி ஒளிபரப்பு  செய்ய ஒரு கட்டுப்பாட்டு அறை வேணாம். கவலை வேண்டாம் அதுவும் தயார் தான். எவ்வளவோ  செய்திட்டோம் இதுகூட செய்யமாட்டோமா என்ன   மேல இருக்குது பாருங்க ...



எல்லாம் தயார் நிலையில் உள்ளது ...ஆமா நீங்க மட்டும் ரெடி ஆகலைன்னா எப்படி சீக்கிரம் தயாராகுங்க அதுக்கு முன்னாடி யார் யாரெல்லாம் வரப்போறீங்க என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்க ....நாம வருகிற 21 -04 -2009  அன்று பயணிக்க இருக்கிறோம்..என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  

கருத்துகள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) இவ்வாறு கூறியுள்ளார்…
ஹையா. நா தான் முதல் கமெண்ட்...

சுற்றுலா ஐடியா சூப்பர்... படங்களும் அருமை..
சரி சரி மேட்டருக்கு வரேன்..
என்னையும் சேர்த்து, 4 பேருங்க.. டிக்கெட் போட்ட்ருங்க..
அப்போ..நாம 21 ஆம் தேதி சந்திப்போமா??
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அண்ணே இந்த இந்திய அரசியல்வியாதிங்களையெல்லாம் எதாவது விண்கலத்துல ஏத்திக்கிட்டுப் போயி விண்வெளியிலயே விட்டுட்டு வந்திருங்கண்ணே.. புண்ணியமாப் போவும்
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
Hello, Photos are very good.
A tour on April 21st? Present, Sir.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thanks for boston /big pictures
சைவகொத்துப்பரோட்டா இவ்வாறு கூறியுள்ளார்…
என்னையும் சேத்துக்கோங்க!!!
பட் ஒன் கண்டிசன், எல்லோருக்கும்
நான்தான் பரோட்டா சுட்டு கொடுப்பேன்.......
ஹி............ஹி..........:))
பித்தனின் வாக்கு இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா என்னையும் சேர்த்துக்குங்க. நானும் ரெடி. கொஞ்சம் இருங்க. சித்ராவும், ஆனந்தியும் எப்படியும் இப்ப ஆரம்பிச்சா, 21 க்குள் மேக்கப் போட்டு முடிச்சுருவாங்கன்னு நினைக்கின்றேன். ஹி ஹி நன்றி பிரின்ஸ். அருமையான கற்பனை.
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@Ananthi //ஹையா. நா தான் முதல் கமெண்ட்...// முதலில் வந்ததினால் உங்களுக்கு தான் ஜன்னலோர இருக்கை . 4 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.சந்தோசமா!!!
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@முகிலன் //இந்த இந்திய அரசியல்வியாதிங்களையெல்லாம் எதாவது விண்கலத்துல ஏத்திக்கிட்டுப் போயி விண்வெளியிலயே விட்டுட்டு வந்திருங்கண்ணே.. புண்ணியமாப் போவும்// சீக்கிரமா ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க..அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிடலாம்
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@சித்ரா //A tour on April 21st? Present, சார்// அதெல்லாம் சரி அங்கும் வந்து விசில் அடிப்பேன்னு அடம் பிடிக்க கூடாது.
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@சைவகொத்துப்பரோட்டா //பட் ஒன் கண்டிசன், எல்லோருக்கும்
நான்தான் பரோட்டா சுட்டு கொடுப்பேன்....// வாங்க ராசா வாங்க சமையலுக்கு ஆள் இல்லையேன்னு கவலைபட்டுட்டு இருந்தேன் வசமா வந்து மாட்னீகளா
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@பித்தனின் வாக்கு //சித்ராவும், ஆனந்தியும் எப்படியும் இப்ப ஆரம்பிச்சா, 21 க்குள் மேக்கப் போட்டு முடிச்சுருவாங்கன்னு நினைக்கின்றேன்// "2021" ???
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அண்ணே இந்த இந்திய அரசியல்வியாதிங்களையெல்லாம் எதாவது விண்கலத்துல ஏத்திக்கிட்டுப் போயி விண்வெளியிலயே விட்டுட்டு வந்திருங்கண்ணே.. புண்ணியமாப் போவும்

ரிபிட்டேய் ......
அன்புடன் மலிக்கா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா நல்ல ஐடியாவாயிருக்கே. சித்ராமேடம் கண்டிஷனுக்கு நீங்க ஓக்கேயா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

துறவறம் துறந்த துறவியின் கதை !